திருச்சியில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்; வழக்கை தள்ளுபடி செய்தது மதுரை உயர்நீதிமன்றம்!

0
1

திருச்சியில் பல்வேறு பகுதிகளில் ஆளும் கட்சியின் சார்பில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மக்கள் நீதி மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கிஷோர் குமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

2

இதில் சாலையோரங்களில் விபத்துக்களை ஏற்படுத்தும் வண்ணம் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. காவல் துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே பிளக்ஸ் போர்டுகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி சிவஞானம், ஆனந்தி ஆகியோர் கொண்ட அமர்வு, மனுதாரர் ஒரு கட்சியைச் சார்ந்தவர், அவர் மற்றொரு கட்சியின் பிளக்ஸ் போர்டை அகற்ற மனு செய்துள்ளார். இதை ஏற்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்