பறிமுதல் செய்த சரக்கை பிளாக்கில் விற்ற காவலர்கள்; சஸ்பெண்ட் செய்து ஐஜி அதிரடி!

0
1

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள சிறுகனூர் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்த மதுபாட்டில்கள் குறைவாக கணக்கில் காட்டிவிட்டு, மீத பாட்டில்கள் பிளாக்கில் விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் சிறுகனூர் காவல் நிலையத்தில், காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

2

இதில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வரும் சுமதி மற்றும் ஏட்டு ராஜா என்பவர்கள் இருவரும் இணைந்து மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்த சமயத்தில் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது ஓரிடத்தில் இருந்து 3000 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் 1500 மதுபாட்டில்களை மட்டும் கணக்கு காட்டிவிட்டு, மீதி 1, 500 மதுபாட்டில்களை பிளாக்கில் விற்றுள்ளனர். இது உயரதிகாரிகள் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில் மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் நேற்று இரண்டு காவலர்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்