திருச்சி காந்தி மார்க்கெட் 21ந் தேதி முதல் செயல்படும்: மாவட்ட ஆட்சியர்

0
1

திருச்சி காந்தி மார்க்கெட் 21ந் தேதி முதல் செயல்படும்: மாவட்ட ஆட்சியர்

Helios

கொரோனா தொற்றின் பரவல் காரணமாக திருச்சி காந்தி மார்க்கெட் மூடப்பட்டது. காய்கறி மொத்த வியாபாரம் பாலக்கரை சாலை, என். எஸ்.பி.சாலை, மேலப்புலிவார்டு சாலை, மயிலம் சந்தை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது.

இப்பகுதிகளில் அடிப்படை வசதிகளின்றி சிரமப்பட்டு வருவதாகவும், தற்போது திருச்சியில் கொரோனா பரவல் 400 க்கும் கீழ் குறைந்துள்ளதாகவும் கூறி காந்தி மார்க்கெட்டை திறக்க கோரி வியாபாரிகள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர்.

2

இந்நிலையில் திருச்சி கிராப்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோரிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு, திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் காந்தி மார்க்கெட் திறப்பது தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தனர்.

மனுவை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி காந்தி மார்க்கெட் வருகின்ற 21 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

அதன்படி வருகிற ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை காய்கறி மொத்த வியாபாரம் நடத்திக் கொள்ளவும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சில்லரை வியாபாரம் செய்து கொள்ளலாம் என அறிவித்தார்.

மேலும் வியாபாரிகள் அனைவரும் கட்டாயமாக தடுப்பு செலுத்திக் கொள்ள வேண்டும். மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வியாபாரம் மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.

3

Leave A Reply

Your email address will not be published.