வாங்கிய போனுக்கு பணம் தரவில்லை, திருச்சியில் கத்திக்குத்து!

0
1

திருச்சி கே கே நகர் ராஜாராம் சாலையைச் சேர்ந்த இப்ராஹிம் போன் வாங்கி விற்கும் வேலை செய்து வருகிறார். தென்னூர் பகுதியைச் சேர்ந்த சலாவுதீன் சத்திரம் பேருந்து நிலையம் அருகே போன் கடை வைத்துள்ளார்.

2

இந்த நிலையில் சலாவுதீன் இடம் இருந்து போன் வாங்கிய இப்ராஹிம் தொடர்ந்து அதற்கு பணம் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தென்னூர் பகுதியில் நின்று கொண்டிருந்த இப்ராகிமை, சலாவுதீன் கத்தியால் குத்தி உள்ளார். இதில் காயமடைந்த இப்ராகிம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தில்லைநகர் காவல்துறையினர் சலாவூதீனை அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்