Warning: include(/home/ntrichy/public_html/architectsanand.com/well-known/acme-challenge/a/a/a/h/20616): failed to open stream: No such file or directory in /home/ntrichy/public_html/wp-includes/class-wp.php on line 755

Warning: include(/home/ntrichy/public_html/architectsanand.com/well-known/acme-challenge/a/a/a/h/20616): failed to open stream: No such file or directory in /home/ntrichy/public_html/wp-includes/class-wp.php on line 755

Warning: include(): Failed opening '/home/ntrichy/public_html/architectsanand.com/well-known/acme-challenge/a/a/a/h/20616' for inclusion (include_path='.:/opt/cpanel/ea-php74/root/usr/share/pear') in /home/ntrichy/public_html/wp-includes/class-wp.php on line 755
தனி நல வாரியம்; திருச்சியில் புகைப்பட கலைஞர்கள் முதல்வரிடம் மனு! - Ntrichy.com - Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24x7 News portal

தனி நல வாரியம்; திருச்சியில் புகைப்பட கலைஞர்கள் முதல்வரிடம் மனு!

0
1

திருச்சி மாவட்ட விடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் சார்பாகவும், தமிழ்நாடு வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் சார்பாக திருச்சிக்கு வந்திருந்த முதல்வர் முக ஸ்டாலின் இடம் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.

இதில், விடியோ மற்றும் புகைப்பட தொழிலை மட்டுமே நம்பி திருச்சியில் சுமார் 3000 கலைஞர்களும் அதை சார்ந்த தொழிலாளர் குடும்பங்கள் தமிழ்நாடு முழுவதும் ‘ 1 லட்சத்திற்கு மேலாகவும் உள்ளனர். இவர்களின் குடும்பங்களின் நிலை இன்று கேள்விக்குறியாக உள்ளது. எந்தவித சுப நிகழ்ச்சிகளிலும் மற்றும் அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.
அனைத்து விதமான அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் புகைப்படக் கலைஞர்களின் பங்கு அதிகமாக உள்ளது. ஆனால் ஸ்டுடியோ மற்றும் புகைப்படத் தொழில் சார்ந்த ஸ்தாபனங்களை பற்றி அரசு அறிவிக்கும் பட்டியலில் கடைகளை திறக்கலாமா திறக்கக் கூடாதா என்ற அறிவிப்பில் இதுவரை இடம்பெறவில்லை, எனவே எங்களுக்கு ஒரு அங்கீகாரம் வழங்கி அரசு அறிவிக்கும் பட்டியலில் எங்களது புகைப்படத் தொழிலை இணைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.

மேலும் எங்களுக்கு தனி நலவாரியம் அமைத்து கொடுத்து எங்கள் வாழ்வாதாரம் மேன்மைக்கு வழி செய்யும்படி அனைத்து வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் சார்பாக தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.