11 வகுப்புக்கு 14ஆம் தேதி முதல் சேர்க்கை துவக்கம்; திருச்சி சிஇஓ தகவல்!

0
1

திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கூறியுள்ளது, நோய்த்தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் நேரடியாக இயங்க முடியாத நிலை இருந்தது. இதனால் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் 32,000 பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களும். 31,500 பத்தாம் வகுப்பு மாணவர்களும் திருச்சி மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை ஜூன் 14 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று திருச்சி மாவட்ட சிஇஓ கூறியுள்ளார்.

2

இதற்கு மாணவர்கள் யாரும் கவலைப்பட தேவையில்லை பதினோராம் வகுப்பு சேர உள்ளவர்கள் அவர்கள் விருப்பப்பட்ட பாடத்தை தேர்வு செய்யலாம், எப்போதும் உள்ள மாணவர் சேர்க்கையை விட 15 சதவீதம் கூடுதலாக ஒரு வகுப்பிற்கு மாணவர்களை சேர்க்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் கூடுதல் மாணவர்கள் ஒரு பிரிவை தேர்வு செய்யும் நிலையில் அவர்களுடைய ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படும்.

4

இனி 12ஆம் வகுப்புக்கான ஆன்லைன் வகுப்புகள் நடைபெறலாம். மேலும் அனைத்து வகுப்புகளுக்குமான பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது என்று கூறியுள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்