திருச்சியை குப்பையில்லா நகரமாக்க அமைச்சர் நேரு உத்தரவு ; மெகா தூய்மைப் பணி தொடக்கம்!

0

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு திருச்சி மாவட்டத்தில் குப்பைகளை அகற்ற திருச்சி மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த அடிப்படையில் திருச்சி மாநகராட்சி உட்பட்ட 57, 58, 60 வார்டுகளில் மெகா தூய்மைப் பணி தொடங்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் கூறுகையில், நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு திருச்சி மாவட்டத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மேலும் 65 வார்டுகளிலும் குப்பைகளை அகற்றி மாநகரை தூய்மையாக வைத்துக்கொள்ள தீவிர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

சந்தா 2

இந்த அடிப்படையில் திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 57, 58, 60 ஆகிய மூன்று வார்டுகளிலும் தற்போது மெகா தூய்மைப் பணி நடைபெற உள்ளது. மேலும் அந்தப் பகுதிகளில் தினமும் குப்பை அள்ளுவதை உறுதி செய்யவும், குப்பை சேராமல் தவிர்க்கவும், வீடுதோறும் குப்பை களை பறிமுதல் செய்யவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

‌சந்தா 1

மேலும் மக்கள் குப்பைகளை வீதிகளில் கொட்டாமல் மாநகராட்சியிடம் கொடுத்தும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த பணி திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.