மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் குறித்து எம்.எல்‌.ஏ-விடம் பெண்கள் புகார்!

0

மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது சந்தித்து பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் அந்த பகுதி பெண்களுக்கு கடனுக்கு பணம் கொடுத்திருக்கின்றன. இந்த நிலையை ஊரடங்கு அமலில் உள்ளதால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள பெண்களிடம் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்று மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனம் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து மே மாதமே பெண்கள் மணப்பாறை வட்டாட்சி தலைவர் லஜபதிராஜிடம் புகார் அளித்தனர்.

சந்தா 2

ஆனாலும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் பெண்களைத் தொடர்ந்து மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது சந்தித்து கடன் தொகையை திருப்பி செலுத்த கால அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

‌சந்தா 1

இதற்கு எம்எல்ஏ அப்துல் சமத், இதை மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக பெண்களிடம் உறுதி அளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.