நாளை முதல்வர் மு க ஸ்டாலின் கல்லணையை ஆய்வு செய்கிறார்!

குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடைபெற உள்ளது, இதனால் டெல்டா மாவட்டங்களில் நடைபெற்றுவரும் குடிமராமத்து பணியை பார்வையிட நாளை தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்து இறங்கும் முதல்வர் கல்லணையில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்கிறார்.
பிறகு தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்து, பிறகு சேலம் புறப்பட்டுச் செல்கிறார்.
இந்த நிலையில் கல்லணை முழுவதும் வண்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
