சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை; பாமக நிறுவனர் ராமதாஸ் மீது சாடல்!

0

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சீர்மரபினர் நல சங்கத்தின் ஆலோசகர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சந்தா 2

சீர்மரபினர் நலச்சங்க ஆலோசகர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பல சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இனத்தோடு வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் தனி இட ஒதுக்கீடு என்ற கோரிக்கைகளை நம்முடைய சமூக நல்லிணக்கத்திற்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
இதுபோன்று ஒவ்வொரு சமூகத்திற்கும் தனி இட ஒதுக்கீடு கொடுப்பது என்பது சாத்தியமாகாது, இவ்வாறு தனது சமூகத்திற்கு மட்டும் போராட்டத்தை நடத்தி வரும் பாமக தலைவர் ராமதாஸ், சமூக நீதிக்கான எந்த ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை.

எனவே தமிழக அரசு சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டை முறைப்படுத்த வேண்டும் என்றும், மேலும் அனைத்து மக்களுக்கும் முறையான வேலைவாய்ப்பு, பங்களிப்பு , பிரதிநிதித்துவம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என்றும் பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.