செயின்ட் ஜோசப் கல்லூரியின் கோவிட் நிவாரண நிதி திட்டம்

0
செயின்ட் ஜோசப் கல்லூரி கோவிட் 19 நிவாரண நல நிதி உதவி திட்டதை திருச்சி மாவட்ட கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் 10 பயனாளிகளுக்கு வழங்கி நிகழ்ச்சியை கல்லூரியின் லாலி அரங்கத்தில் துவக்கி வைத்தார்
சந்தா 2
செப்பர்டு விரிவாக்கத்துறை பணி செய்யும் 67 கிராமங்கள், மற்றும் 16 நகர்புற குடிசை வாழ் பகுதியிலிருந்து மாற்று திறனாளிகள், விதவைகள், கைவிடப்பட்ட முதியோர், ஆதரவற்ற குழந்தைகள் இது போன்று 1000 பேரை தேர்தெடுத்து, ஒவ்வொருவருக்கும் தலா 2000 வீதம் ரூபாய் 20 லட்சம்  தொகையை கல்லூரி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளன. என்பதை பற்றி கல்லூரியின் முதல்வர் சே.ச. ஆரோக்கியசாமி சேவியர் பேசினார்.
‌சந்தா 1
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் அதிபர் தந்தை முனைவர் லியோனார்டு சே.ச, செயலர் தந்தை பீட்டர் சே.ச, செப்பர்டு விரிவாக்கத்துறை இயக்குநர் தந்தை பெர்க்மான்ஸ் சே.ச, சேசு சபை அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
ரூபாய் 2000 தங்களது கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக பயனாளிகள் அனைவரும், தங்களது தொலை பேசி வழியாக தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.