ஸ்ரீரங்கம் கோவிலில் ஊரடங்கிலும் தொடரும் அன்னதானம்: 

0

 ஸ்ரீரங்கம் கோவிலில் ஊரடங்கிலும் தொடரும் அன்னதானம்: 

கொரொனா ஊரடங்கு காலத்திலும் ஸ்ரீரங்கம் கோயில் அன்னதான திட்டத்தின் கீழ் 45,027 சாப்பாட்டுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

‌சந்தா 1

கடந்த 2012 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் அப்போதைய தமிழ்நாட்டின் முதல்வருமான ஜெயலலிதா அறநிலையத்துறையின் சார்பில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை ஸ்ரீரங்கம் கோயிலில் தொடங்கி வைத்தார். அதன்படி, அன்று முதல் நாள்தோறும் ஸ்ரீரங்கம் கோயிலில் காலை 8 மணி முதல் இரவு10 மணி வரை 3000 பேருக்கு சாதம், சாம்பார்,ரசம், தயிர், கூட்டு, பொரியல் என அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரொனா பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கடந்த 24.4.2021 முதல் பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது.

சந்தா 2

இருப்பினும், ஸ்ரீரங்கம் கோவிலில் அன்னதானம் நிகழ்வானது தடைபடாத விதமாக நாள்தோறும் தக்காளி சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் என 1300 க்கும் மேற்பட்ட சாப்பாட்டுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றில் கோவிலில் நேரடியாக 1,100 பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு 450 பொட்டலங்களும், ஸ்ரீரங்கம் மருத்துவமனைக்கு 150 பொட்டலங்களும், மீதி கோயிலிலும் மக்களுக்கு அன்னதானமாக வழங்கப்படுகின்றன.

மேலும், ஸ்ரீரங்கத்தின் உபகோயில்களான திருவெள்ளறையில் 75 சாப்பாட்டு பொட்டலங்களும், அன்பில் மாரியம்மன் கோயிலில் 75 சாப்பாட்டு பொட்டலங்களும், உறையூர் நாச்சியார் கோவில் 75 சாப்பாடு பொட்டலங்களும் நாள்தோறும் வழங்கப்பட்டு வருகின்றன. மொத்தத்தில் இந்த கொரொனா 2ம் அலை ஊரடங்கு காலத்தில் 45 ஆயிரத்து 27 சாப்பாட்டுப் பொட்டலங்கள் வழங்கி ஏழை மக்களின் பசியை போக்கி உள்ளது திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகிகளிடம் பேசியபோது, நன்கொடை அல்லது உண்டியல் வருமானத்தை கொண்டு நாள்தோறும் மக்களுக்கு அன்னதானம் வழங்கி வந்தோம். ஆனால் கொரொனா காலத்தில் கோயில் வழிபாடு மேற்கொள்ள பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் இந்த இரண்டு வகையில் வரக்கூடிய வருமானம் முற்றிலும் நின்றுவிட்டது. இருப்பினும் தொடர்ந்து அன்னதானம் வழங்கி வருகிறோம். தற்பொழுது கோயில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்குவதற்கு முன் வரும் பக்தர்களை வரவேற்கிறோம். ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். எனவே அன்னதானம் செய்ய முன்வரும் நபர்கள் நேரடியாக கோயில் நிர்வாகதின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாம் அல்லது கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை சாமான்கள் வழங்கலாம் என்று கூறினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.