ரயில்வே அமைச்சகம் சார்பில் திருச்சிக்கு வந்தது 80 டன் ஆக்ஸிஜன்:

0

ரயில்வே அமைச்சகம் சார்பில் திருச்சிக்கு வந்தது 80 டன் ஆக்ஸிஜன்:

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் பெருமளவு ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இதனையடுத்து நாடு முழுவதும் 20 ஆக்ஸிஜன் ரயில்கள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சந்தா 2

இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் சார்பில் திருச்சிக்கு நேற்று (9/06/2021) மூன்றாவது முறையாக ஒடிசா மாநிலம் பிலாய் ஸ்டீல் பிளாண்ட் செயில் நிறுவனத்தில் இருந்து 4 சிலிண்டர் வேகன்களில் தலா 20 டன் திரவ ஆக்சிஜன் வீதம் மொத்தம் 80 டன் கொண்டு வரப்பட்டது.

‌சந்தா 1

திருச்சி முதலியார் சத்திரம் ரயில்வே குட்ஷெட் யார்டில் ரயில் மூலம் வந்த ஆக்சிஜனை டேங்கர் லாரிகளில் நிரப்பி,  பல்வேறு ஊர்களின் அரசு மருத்துவமனைகளுக்கு நேற்று (10/06/2021) அனுப்பப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.