ஆன்லைன் வகுப்பு; பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஐஜி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை!

0
1

மத்திய மண்டலம் மான திருச்சி சரக ஐஜி பாலகிருஷ்ணன் திருச்சி மாவட்ட மற்றும் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 255 பேருடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டார்.

2

அப்போது ஐஜி பாலகிருஷ்ணன் பேசுகையில், கொரோனா காலகட்டம் என்பதால் இணைய வழி வகுப்புகள் மூலமாக மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தமிழக முதல்வரின் ஆலோசனைப்படியும், பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதல்படியும் வகுப்புகள் மேற்கொள்ளவேண்டும். பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் ஆன்லைன் வகுப்புகள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மூலமாக குறிப்பிட்ட இடைவெளியில் பதிவுகள் ஆராயப்பட வேண்டும்.

ஆசிரியர்கள் மீது ஏதேனும் புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே ஆன்லைன் வகுப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து கல்வி நிலையங்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்