திருச்சி இளைஞர் முன்ஜாமீன் கேட்டு வழக்கு, போலீசாரை மிரட்டினால் கடும் நடவடிக்கை நீதிமன்றம் எச்சரிக்கை!

0

கொரோனா முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் காவல்துறையினர் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருச்சியைச் சேர்ந்த இளைஞர்கள் முகக் கவசம் அணியாமல் ஆட்டோவிலிருந்தனர். அப்போது ரோந்து பணியில் இருந்த திருச்சி கோட்டைக் காவல் நிலைய காவலர் முகக் கவசம் அணிவும், கூட்டமாக இல்லாமல் கலைந்து செல்லுமாறும் கூறியுள்ளார் அதற்கு இளைஞர்கள் காவலரை மிரட்டினர்.

இதைத்தொடர்ந்து கோட்டை காவல்நிலையத்தில் காவலர் அளித்த புகாரின் பேரில் 5 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஒருவர் மட்டும் தலைமறைவாக இருந்தார். இந்தநிலையில் அந்த நபரும் சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் முன்ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

சந்தா 2

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, கொரோனா காலத்தில் காவல்துறையினர் ஏற்கனவே மன உளைச்சலில் உள்ளனர். இந்த நிலையில் அவர்களை மேலும் மன உளைச்சலை உண்டாக்கும் விதமாக சிலரின் செயல்பாடுகள் அமைந்து இருக்கிறது.
இவ்வாறு காவல்துறையினரை மிரட்டும் செயல்களை ஒரு போதும் ஏற்க முடியாது. சம்பந்தப்பட்ட காவலருக்கு உரிய பதிலை அளிக்க வேண்டும். அதை விடுத்து விட்டு காவல்துறையினரை மிரட்டுவது சட்டவிரோதமானது. இந்த செயலை கடுமையாகவே அணுக வேண்டும்.

‌சந்தா 1

மேலும் சம்பந்தப்பட்டவர் இனி இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட மாட்டேன் என்று பதிவாளரிடம் கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும். மற்றும் வழக்கறிஞர் எழுத்தாளர் சங்கத்திற்கு ரூபாய் பத்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். மேலும் 14ம் தேதிக்குள் அதுகுறித்த தகவலை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.