திருச்சி அமமுக நிர்வாகிக்கு போன் செய்து, “கண்டிப்பாக வருவேன்” என்று கூறிய சசிகலா!

0
1

சமீபகாலமாக சசிகலா அமமுக நிர்வாகிகளிடமும், தனது ஆதரவாளர்களுடன் போன் செய்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். இது அதிமுக வட்டாரங்களில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் கட்சியை தக்கவைத்துக்கொள்ள ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் சென்னையில் மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ஆலோசித்து வருகின்றனர்.


இந்த நிலையில் சசிகலா, தொண்டர்களிடம் பேசிய ஆடியோ தொடர்ந்து வெளிவந்தவண்ணம் இருக்கிறது. இவ்வாறு திருச்சி மாவட்டம் அமமுகவின் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் செந்தில் என்பவரிடம் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது.


எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் செந்திலுக்கு போன் ஒன்று வந்துள்ளது, அதில் நாங்கள் சென்னை சசிகலா வீட்டில் இருந்து பேசுகிறோம் என்று கூறிய சசிகலாவிடம் போனை கொடுத்து இருக்கின்றனர், போனில் பேச தொடங்கிய செந்தில் அழுதுகொண்டே, அம்மா நீங்கள்தான் கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும். நான் உங்களது தீவிர விசுவாசி, நீங்க தலைமைக்கழகம் போகிறீர்கள் என்றால் நாங்கள் அனைவரும் திரண்டு வந்து விடுவோம். துரோகிகளை அனைவரையும் ஒழிக்க வேண்டும் என்று கூற.

2


சசிகலாவோ…. சரி சரி என்று பதிலளித்தார். மேலும் கண்டிப்பாக வருவேன், முன்பு இருந்த அதிமுகவை மீண்டும் கொண்டுவருவேன், தொண்டர்களின் மனக்குமுறல் புரிகிறது. எல்லோரும் சமூக இடைவெளியுடன் இருங்கள், கவசம் அணியுங்கள் என்று தொண்டரிடம் பேசினார் சசிகலா. இது அதிமுக வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.