முன்கள பணியாளர்களாக மாநகராட்சி ஊழியர்களையும் அறிவிக்க வேண்டும் ; அமைச்சர் கே என் நேருவிடும் கோரிக்கை!

மாநகராட்சி அலுவலர் சங்க கூட்டமைப்பு தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் பொதுச்செயலாளர் சீத்தாராமன் ஆகியோர் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேருவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர், அதில்,
கொரோனா தொற்று காலத்தில் தொடர்ந்து பணியாற்றிவரும் நகராட்சி மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் அங்கீகாரம் அளிக்கும் வகையில் அவர்களை முன்கள பணியாளர்களாக அரசு அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மேலும் கொரோனா நோயாளிகளை வீடு தேடி அடையாளம் காணுதல், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சேர்த்தல், பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றுதல், கொரோனாவால் உயிரிழந்தோரை முறைப்படி அடக்கம் செய்ய பணியை மேற்கொள்ளுதல் போன்ற அனைத்து பணிகளையும் நகராட்சி, மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே தமிழக அரசு நகராட்சி மற்றும் மாநகராட்சியில் பணியாற்றும் பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
