திருச்சியில் 100 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு, பல்வேறு இடங்களில் சாராயம் பறிமுதல்!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கல்லணை ரோடு திருவளர்ச்சோலை பகுதியில் காவேரி ஒரு அருகே சாராய ஊறல் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் காவேரி ஆறு அருகே விற்பனைக்காக 2 பேரல்களில் வைக்கப்பட்டிருந்த சாராய ஊறல்களை கைப்பற்றி காவல்துறையினர் அளித்தனர்.
மற்றும் முசிறி காவல் ஆய்வாளர் கருணாகரன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சாராய கேனுடன் நடமாடிய ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது தெரிய வந்தது இதையடுத்து மகேஷ், சுரேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல் துறையூர் சோபனபுரம் பகுதியில் சாராயக் கேனுடன் நடமாடிய ஆனந்த் என்பவரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்ஐ சிவராமன் கைது செய்து சிறையில் அடைத்தார்.
