திருடர்கள் அபாயம் ; மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய எம்எல்ஏ !

0
1

திருச்சி பாலக்கரை அருகே உள்ள ஒ பாலம் பகுதியில் தொடர் வழிப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி இருந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் அந்த பாலம் வழியாக செல்லவே அஞ்சும் நிலைக்குச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் மின் விளக்கு சரிசெய்து தரக்கோரி பலமுறை மின்வாரியத்திற்கு புகார் கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலக்கரை பகுதி ஆழ்வார் தோப்பு, ஒ பாலம் பகுதியில் இன்று (ஜூன் 7 ) எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் திடிர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பழுதடைந்து பயன்பாடற்ற நிலையில் இருந்த மின்விளக்குகளை பழுது நீக்கி சரி செய்திடவும், அதே பகுதியில் கழிவுநீர் சாக்கடை அடைப்புகளை அகற்றி சுத்தம் செய்திடவும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கி அறிவுறுத்தினார்.

2


எம்எல்ஏவை நேரில் சென்று ஆய்வு செய்ததன் மூலம் அந்த பகுதி மக்கள் பெருமூச்சுவிட்டு, நிம்மதி அடைந்திருக்கின்றனர்.

மேலும் உடன் மாநகராட்சி அதிகாரிகள் ராஜா (JE), கலையரசி (EB-AD) மற்றும் மாநகராட்சி அதிகாரிகள்,திமுக பகுதி செயலாளர் மண்டி சேகர் மற்றும் ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த திமுகவினர் உடனிருந்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.