மாணவி மாயம், போலீஸ் வழக்குப்பதிவு !

0

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள ஆலத்தூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகள் சத்யா.

சந்தா 2

இவர் தனியார் கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் இவர் சரவணன் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சத்யாவின் தந்தை பெருமாள் பலமுறை கண்டித்துள்ளார். இந்த நிலையில் காதல் விவகாரம் குறித்து தந்தை மகளை மீண்டும் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சத்தியா வெளியே சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் மீண்டும் வீடு திரும்பாததை அடுத்து தந்தை பெருமாள் திருவரம்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.