திருச்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் கே என் நேரு !

0

ஒடிசா மாநிலம் பிலாயிலிருந்து திருச்சி குட்ஷெட்டுக்கு ரயில் மூலம் வந்த 80 டன் ஆக்சிஜன், டேங்கர் லாரிகள் வந்து இருந்தன. இதை பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை நேற்று நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் கே என் நேரு.

மேலும் லயன்ஸ் கிளப் சார்பில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவு பொருட்களை அதன் நிர்வாகிகள் அமைச்சர் கே நேருவிடம் வழங்கினார். இதை அமைச்சர் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு பிரித்துக் கொடுக்க உத்தரவிட்டார்.

‌சந்தா 1
சந்தா 2

மற்றும் கொரோனா தொற்று காலத்திலும் மற்ற பிற மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொள்ளும் வகையில், திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூரில் புங்கே (Bunge) நிறுவனம் சார்பில் ரூ.12 லட்சம் மதிப்பிலான இரத்த பரிசோதனை இயந்திரத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் கே என் நேரு. ஒரு மணி நேரத்தில் 600 பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தின் மூலம் பரிசோதனை முடிவுகளை மக்கள் விரைவாக பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் ஒருபுறம் கொரோனா தடுப்பு பணிகளும் மறுபுறம் நீர் நிலைகளில் தூர்வாரும் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகிறது. ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், இந்த கால அவகாசத்திற்குள் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து அமைச்சர் கே என் நேரு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.