மக்கள் குறைகளை தெரிவிக்க கொரோனா கட்டுப்பாட்டு அறை, திருச்சி சரக ஐஜி அறிவிப்பு !

0
1

மக்கள் குறைகளை தெரிவிக்கவும், அவர்களுடைய தேவைகளை கூறவும் மாவட்டம் முழுவதும் ஏற்கனவே கட்டுப்பாட்டு அறைகள் உள்ளது. இந்த நிலையில் மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

மக்களின் குறைகளை கேட்டறிய மாவட்டவாரியாக ஏற்கனவே கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 97 சோதனைச் சாவடிகளில் அது குறித்த தகவல்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

மேலும் மக்கள் குறைகளை தெரிவித்தும் நிவாரணம் கிடைக்கப் பெறாத பட்சத்தில் திருச்சி சரக கொரோனா கட்டுப்பாட்டு அறை எண் 0431 2333909 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் அல்லது தஞ்சை சரக கட்டுப்பாட்டு அறை எண் 04362 2775 77 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு மக்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.