மத்திய மண்டல ஐஜி, திருச்சி சரக டிஐஜி பொறுப்பேற்பு !

0

திருச்சி மாவட்டத்திலிருந்து இயங்கும் மத்திய மண்டல காவல்துறை தலைவராக பாலகிருஷ்ணன் நேற்று பொறுப்பேற்றார். திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் கூடுதல் பொறுப்பாக வகித்து வந்த நிலையில் பாலகிருஷ்ணன் புதிதாக பொறுப்பேற்றுள்ளார்.

பாலகிருஷ்ணன் ஏற்கனவே திருச்சியில் டிஐஜியாக பணியாற்றிய போது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் நல்ல உறவை ஏற்படுத்த முயற்சித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

 


மற்றும் திருச்சி சரக டிஐஜி-யாக இருந்த ஆனி விஜயா சென்னை காவல் துறை நிர்வாக பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளதால், அந்த பொறுப்பிற்கு ராதிகா அமர்த்தப்பட்டார். இந்நிலையில் நேற்று ராதிகா திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.