திருச்சியில் 9 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு!

0

திருச்சி மாவட்டத்தில் 9 புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் திருவரம்பூர் பகுதியில் உள்ள பெரிய சூரியூர் நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்துவைத்தார்.

சந்தா 2

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியது, திருச்சி மாவட்டத்தில் திருவரம்பூர் பகுதியில் உள்ள குண்டூர், சூரியூர் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள நவலூர், குட்டப்பட்டு, மணிகண்டன், பூங்கொடி, மணப்பாறை பகுதியில் உள்ள மரவனூர், துறையூர் பகுதியில் உள்ள பி.மேட்டூர், ஆலம்பட்டி, வைரிசெட்டிபாளையம் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் புதிதாக நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் கோடைக்காலங்களில் விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திறக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்வோர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சிற்றரசு, திருவரம்பு வட்டாட்சியர் செல்வகணேஷ், மற்றும் முன்னாள் எம்எல்ஏ சேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.