திருச்சியில் சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் போராட்டம் !

0
1

திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரிடர் காலங்களிலும் தொடர்ந்து பணியாற்றும் சமையல் எரிவாயு உருளை வினியோகஸ்தர்களை தமிழக அரசு நுன் களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் கணேசன் தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட தலைவர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார். மேலும் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலிண்டர்கள் உடன் கலந்துகொண்டு, இறுதியில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.