காவிரி ஆற்றில் மணல் திருடியதாக 9 பெண்கள் மீது வழக்கு பதிவு!

0
1

திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் உள்ள அக்ரஹாரம் படித்துறையில் தொடர்ந்து மணல் அள்ளப்படுவதால் முசிறி காவல்நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது.

இதன் அடிப்படையில் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் ஆய்வு செய்த போலீசார் சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக ஒன்பது பெண்களை பிடித்து விசாரித்தனர்.

இவர்கள் சாக்குப்பையில் மூட்டை மூட்டையாக மணலை அள்ளி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது, இதனடிப்படையில் மல்லிதா, சந்திரா, ருக்மினி, லட்சுமி, ரஞ்சிதம், உஷா, பெரியக்காள் ஆகிய 9 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

3

Leave A Reply

Your email address will not be published.