திருச்சியில் கட்டுமான  பொறியாளர்கள் சங்கம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்:

0

திருச்சியில் கட்டுமான  பொறியாளர்கள் சங்கம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்:

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருச்சியில் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் ஊழியர்களுக்காக கொரோனா தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்துள்ளது. இதில் 45 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் விருப்பமுடைய ஊழியர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‌சந்தா 1
சந்தா 2

இத்தடுப்பூசி முகாம் திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள  E.R.மேல்நிலைப்பள்ளியில் நாளை (4/06/2021) வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமில், சங்க பொறியாளர்கள் குடும்ப உறுப்பினர்கள் பணியாட்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர்.  மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் அவசியம் ஆதார் கார்டை எடுத்து வர வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.