17 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை ; பெற்றோர் அதிர்ச்சி, பெயிண்டர் ஓட்டம் !

0
1

திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரம் பகுதியில் உள்ள 17 வயது சிறுமியை அதே பகுதியில் உள்ள பெயிண்டர் பிரபு (24) என்பவர் காதலித்து வந்துள்ளார்.

2

இந்த நிலையில் இருவரும் இடையே பழக்கம் ஏற்பட்டு சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். இதைத்தொடர்ந்து நேற்று சிறுமிக்கு திடீரென்று இடுப்பு வலி ஏற்பட, பெற்றோர்கள் சிறுமியை திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அப்போது சேமிக்கும் குழந்தை பிறந்துள்ளது இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சிறுமியிடம் விசாரித்து, சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபு என்ற பெயிண்டர் மீது திருச்சி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும் அந்தப் பெண் 17 வயதுக்குட்பட்ட சிறுமி என்பதால் பெயிண்டர் பிரபு மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பெயிண்டர் பிரபு தலைமறைவாக உள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்