பிளஸ் 2 தேர்வு, இரண்டு நாட்களில் முடிவு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்!

0
1

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் சென்ற கல்வியாண்டு இயங்கவில்லை. பெரும்பான்மையான வகுப்புகள் இணையம் வழியாகவே நடத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில் 2021 – 2022 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டு தொடங்க வேண்டிய சூழல் வந்திருப்பதால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களை எப்படி தேர்வு செய்வது என்ற குழப்பம் நிலவி வருகிறது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியது, கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் சங்கத்தினர் என்று அனைவரோடும் கலந்து ஆலோசித்து இரண்டு நாட்களில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

2

மேலும் சிபிஎஸ்இ பிளஸ் டூ மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று நேற்று மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3

Leave A Reply

Your email address will not be published.