வீடு தேடிச் சென்று மளிகை பொருட்களை விற்பனை செய்ய திருச்சி கலெக்டர் அனுமதி!

0
1

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொது போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அற்ற பிற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில் மாநகராட்சியின் சார்பில் மற்றும் மாநகராட்சி அனுமதி பெற்ற வாகனங்கள் காய்கறிகளை வீடுதேடி சென்று விற்பனை செய்கின்றன. ஆனால் மளிகை பொருட்கள் தேவை ஏற்பட்டுள்ளதால் திருச்சி கலெக்டர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2

திருச்சி கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு, ஊரடங்கு அமலில் உள்ளதால் பொது போக்குவரத்தை தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காய்கறிகள், பழங்கள் வாகனம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல மளிகை பொருட்களும் அந்தந்த பகுதியில் உள்ள மளிகை கடைகள் வாகனங்களில் எடுத்துச் சென்றும், தள்ளு வண்டியில் எடுத்துச் சென்றும், வீட்டிற்கு சென்று வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது.
மளிகைக் கடை நடத்துபவர்கள் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை மளிகைப் பொருட்களை எடுத்துச்சென்று கேட்கும் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று விற்பனை செய்யலாம் என்றும், மேலும் மொத்தமாக காலை 7 மணி முதல் மதியம் ஒரு மணிக்குள் வாங்கி விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு விற்பனை செய்யும் அனைவரும் மாநகராட்சி உதவி ஆணையர், நகராட்சி கமிஷனர், பேரூராட்சி செயலர், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு விண்ணப்பித்து அனுமதி அட்டையை பெற்றுக் கொண்டு வியாபாரம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் கடைகளில் வைத்து தனிநபருக்கு விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்