திருச்சியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ கஞ்சா பறிமுதல் !

0

திருச்சி மாவட்டம் உறையூர் அருகே உள்ள ஆதி நகரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக உறையூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் உறையூர் காவல்துறை ஆய்வாளர் மணிராஜ் தலைமையிலான போலீஸார் அந்தப் பகுதியில் ஆய்வு செய்ததில், ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தது, அந்த வீட்டிலிருந்து 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வீட்டில் இருந்த ஹரிஹரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.