கொரோனா பணியோடு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த முயற்சி, அமைச்சர் கே.என். நேரு பேட்டி !

0
1

திருச்சி மாவட்டம் கோ – அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் மற்றும் கபசூர சூரணம், அமுக்குரா சூரணம், நிலவேம்பு சூரணம், சளி, இருமல் மாத்திரைகள் அடங்கிய சித்த மருந்து தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மே 29 இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு செய்தியாளர் சந்திப்பில் கூறியது , கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரடி கள ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார். இந்த நிலையில் தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் மட்டும் கொரோனா பரவல் அதிகரித்திருக்கிறது. அதில் திருச்சியும் ஒன்று . இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கொரோனா அதிகமாக உள்ள கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று ஆய்வு பணியை மேற்கொள்கிறார்.

2

இவ்வாறு கொரோணா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திருச்சியில் படுக்கை வசதி அதிக அதிகப் படுத்தப்பட்டுள்ளது. தற்போது திருச்சி அரசு பொது மருத்துவமனையில் 30 ஆக்சிஜன் படுகைகள் காலியாக உள்ளது.

இவ்வாறு தொடர்ந்து செயல்படுவதால் நேற்றைய தினம் திருச்சியில் கொரோனா பாதிப்பு 1200 என்ற அளவிற்கு வந்துள்ளது. இது கடந்த நாட்கள் ஒப்பிடும்போது மிகக் குறைவாக இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் கொரோனாவை கட்டுபடுத்த மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் பேசினார்.
இதுமட்டுமல்லாது ஸ்ரீரங்கம் கொள்ளிடம் பகுதியில் பழுதடைந்துள்ள குடிநீர் கொண்டு செல்லும் பணியை பார்வையிட்டு 4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்டம் முழுவதும் குடிநீர் விநியோகம் தடையின்றி கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரியமங்கலம் குப்பை கிடங்கை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உய்யகொண்டான் வாய்க்காலை தூர் வாரவும் மழைக்காலத்திற்கு முன் அனைத்து வாய்க்காளையும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

மேலும் கொரோனா பணி மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் அத்தியாவசிய தேவைகள் கிடைக்கவும், சாலை, குடிநீர், பாதாள சாக்கடை திட்டங்களை செயல்படுத்தவும் அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.
கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.