துபாயிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட பசை வடிவிலான தங்கம்

0

சார்ஜாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ஒன்றே முக்கால் கிலோ தங்கம் திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

வளைகுடா நாடான சார்ஜாவிலிருந்து 28ம் தேதி  100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சிறப்பு விமானம் திருச்சிக்கு வந்தது. வந்த பயணிகளை  சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை மேற்கொண்டதில் இருவர் பிடிபட்டனர்.

அவர்களில் ஒருவர் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பழனி (39), மற்றொருவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்தசெல்வராஜ் (28).

இருவரும் தங்களது உடலுக்குள் முறையே 900 கிரமம் மற்றும் 800 கிராம் என சுமார்  1,700 கிராம் தங்கத்தை (பசைவடிவில்) மறைத்து கொண்டு வந்திருந்தனர். இருவரையும் மருத்துவமனையில் சேர்த்து, தங்கத்தை வெளியே எடுத்தனர் மருத்துவரகள். பின் இருவரையும் கைது செய்து தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். தங்கத்தின் மதிப்பு ரூ. 86 லட்சம்

Leave A Reply

Your email address will not be published.