திருச்சி அருகே 150 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிப்பு !

0
1

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள தொப்பம்பட்டி என்ற பகுதியில் பழச்சாறுகளை கொண்டு சாராய ஊறல் தயாரிக்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் தொப்பம்பட்டி அருகே உள்ள மலைப் பகுதியில் பழ சாராய ஊறல் தயாரிக்கப்பட்டு அதிக விலைக்கு விற்கப் படுவது தெரிய வந்தது. இதனடிப்படையில் அந்த இடத்தைச் சுற்றி வளைத்த போலீசார் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 லிட்டர் சாராய ஊறல்களை கண்டுபிடித்து தரையில் ஊற்றி அளித்தனர்.

மேலும் ஊறல் தயாரித்தற்காக அழகிரிசாமி, பொன்னுசாமி, ராமராஜன், லட்சுமி என்ற நாலு பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.