திருச்சி மாநகரில் நாளை குடிநீர் வராது!

0

திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, திருச்சி மாநகர பகுதிகளான ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் மற்றும் ஆளவந்தான் படித்துறையில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு நிலையம் ஆகிய இரண்டு நீர் சேகரிப்பு நிலையங்களிலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை சனிக்கிழமை திருச்சி மாநகரின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

சந்தா 2

இதில் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதி, சஞ்சீவி நகர் பகுதி, தேவதானம் பகுதி, விறகுப்பேட்டை, மகாலட்சுமி நகர், நேருஜி நகர், அரியமங்கலம் கிராமம், உக்கடை, ஜெகநாதபுரம், மலையாளபுரம், ரயில் நகர், செந்தநீர்புரம், சங்கிலியாண்டபுரம், முன்னாள் ராணுவத்தினர் காலனி, விவேகானந்தர் நகர், ஜே கே நகர், மேலகல்கண்டார்கோட்டை, பொண்ணெரிபுரம், கல்லுக்குழி, பொன்மலைப்பட்டி, மத்திய சிறைச்சாலை பகுதி, சுப்பிரமணியபுரம், விமான நிலைய பகுதி, காமராஜர் நகர், செம்பட்டு, காஜாநகர், காஜாமலை, கே சாத்தனூர், கேகே நகர், தென்றல் நகர், ஆனந்த் நகர், சத்தியவாணி முத்து நகர், ஐயப்பன் நகர், உறையூர், மங்கலம் நகர், பாத்திமா நகர், சிவாஜி நகர், ரெயின்போ நகர், செல்வாநகர், ஆனந்த் நகர், பாரதி நகர், புதூர் பகுதியில், அன்பு நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், தொண்டைமான் நகர், கிராப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை மே 29 குடிநீர் வினியோகம் முழுமையாக நிறுத்தப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.