திருச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்றுக்குட்டி மீட்பு
அண்ணாதுரை (55) என்பவர், சொரத்தூரில் தனது வயலுக்கு 27ம் தேதி காலை சென்றார். அப்போது அவா் அவிழ்த்து விட்ட கன்றுக் குட்டி 75 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. உடனடியாக துறையூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தர தீயணைப்பு ஊழியர்கள் ஒரு மணி நேரம் போராடி கன்றுக்குட்டியை உயிருடன் மீட்டனா்.