தா.பேட்டை பகுதிக்கு தடையற்ற குடிநீர், ஆலோசனைக்குப் பின் எம்எல்ஏ தகவல் !

0

தேர்தல் பிரச்சாரத்தின் போது கே என் நேரு மற்றும் முசிறி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன் ஆகியோர் தா.பேட்டை பகுதிக்கு தடையற்ற குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தனர்.

சந்தா 2

இந்த நிலையில் வெற்றி பெற்றதை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட மன்றத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் மணிவண்ணன், உதவி நிர்வாக பொறியாளர் நடராஜன், ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் தா.பேட்டை பகுதிக்கு தடையற்ற குடிநீர் வழங்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் மக்கள் அனைவருக்கும் குடிநீர் பொதுவானது, அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படும். அமைச்சர் கே என் நேரு கூறியதுபோல விரைவில் இந்த பகுதிக்கு தடையற்ற குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும். இதற்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.