திருச்சி காவல் நிலையங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை சுருட்டிய கிளர்க் ; சஸ்பெண்ட் செய்து கமிஷனர் அதிரடி !

0

திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு 2019- 2020 ஆம் ஆண்டில் இன்வெஸ்டிகேஷன் சார்ஜ் அனுப்புவதில் 2.83 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக மார்ச் மாதம் குற்றச்சாட்டு எழுந்தது.

சந்தா 2

இதை தொடர்ந்து திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண், துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் கிளர்க்காக பணியாற்றி வந்த முன்னாள் அதிகாரி பெருமாள் என்பவர் மீது சந்தேகம் எழுந்தது, தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஓய்வு பெற்ற சூப்பிரண்ட் மணிராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெருமாள் தான் பல காவல் நிலையங்களுக்கு இன்வெஸ்டிகேஷன் சார்ஜை தராமல் பல எழுத்தாளர்களிடம் கையெழுத்தை மட்டும் பெற்றுக்கொண்டு பணத்தை கையாடல் செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து முன்னாள் கேம்ப் சூப்பிரண்ட் பெருமாளை சஸ்பெண்ட் செய்து திருச்சி காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.