திருச்சியில் பரபரப்பு; கொரோனா பாதிக்கப்பட்டவர், குடும்பத்தினருக்கு பரவும் என்ற அச்சத்தில் கழுத்தறுத்து தற்கொலை !

0
1

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள அனுக்கா நத்தம் பகுதியைச் சேர்ந்த பிச்சைமணி இவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

2

நாளுக்கு நாள் தொற்றின் பாதிப்பு அதிகரிக்க பிச்சைமணி அரசு மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அங்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தால் வீட்டிலேயே சிகிச்சை பெற வலியுறுத்தி இருக்கின்றனர். வீட்டிற்கு வந்த பிச்சைமணி வீட்டில் இருப்பவர்களுக்கு தொற்று பாதித்து விடுமோ என்ற அச்சத்தில் மருத்துவமனைக்குச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு வையம்பட்டி அருகே உள்ள விவசாய நிலத்தில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர் தகவலறிந்து விசாரணை நடத்தியதில் பிச்சைமணி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்