திருச்சியில் தீண்டாமை இல்லாத சிறந்த கிராமத்திற்கு பரிசு !

0

ஆண்டுதோறும் தீண்டாமையை கடைபிடிக்காத சிறந்த கிராமப்புற பகுதிகளுக்கு தமிழக அரசு விருது வழங்கி வருகிறது. இந்த அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் 2020 -21 ஆம் ஆண்டிற்கான தீண்டாமையை கடைபிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் சிறந்த கிராமமாக தாத்தையங்கார் பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பைத்தம்பாறை கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சந்தா 2

இந்த கிராமத்தில் வளர்ச்சி செயல்பாடுகள், மக்களுடைய ஒற்றுமை, நல்லெண்ணத்தோடு செயல்படும் முறை ஆகியவற்றைக் கொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்த கிராமம். தேர்வு செய்யப்பட்டுள்ள பைத்தம்பாறை கிராமத்திற்காக, அதன் ஊராட்சி மன்ற தலைவர் கமலநாதனிடம் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு கிராம வளர்ச்சிக்காக 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.