ஊரடங்கு விதிமுறையை மீற வேண்டாம் திருச்சி போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தல் !

0

கொரோனா இரண்டாவது அலை காரணமாக இன்று முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் இதுகுறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் கூறுகையில், திருச்சி மாநகர பகுதிகளில் 22 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் பேரிகார்டை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு நேரத்தில் மக்கள் தேவையற்று வெளியே சுற்றித் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் வழக்குப்பதிவு செய்யப்படும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கூறியுள்ளார். மேலும் அனுமதிக்கப்பட்ட கடைகள் விதிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.