2 லட்சம் கொரோனா நிவாரண நிதி வழங்கிய திருச்சி கவி நிறுவனம் !

0

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பெருமளவில் நிதி தேவைப்படுவதால் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழக அரசிற்கு மக்கள் நன்கொடை வழங்க கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள், தனிநபர்கள் பிரபலங்கள் என்று பலரும் தமிழக அரசிக்கு நிதியாக நன்கொடை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்சி கவி அக்ரோ ஏஜென்சி மற்றும் கவி பர்னிச்சர் குழுமங்களின் தலைவர் வி.எஸ்.டி. பாபு முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்காக ரூபாய் 2 லட்சத்தை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கினார். உடன் நகர செயலாளர் அன்பழகன் மற்றும் தெளபிக் ஆகியோர் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.