திருச்சி அரியமங்கலம் குப்பைகிடங்கு ஓராண்டுகளில் தூய்மை
அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகளை 20ம் தேதி ஆய்வு செய்த திருவெறும்பூா் தொகுதி எம்எல்ஏ-வும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியது
.திருச்சியில் ஆங்கிலேயா் காலத்தில் இருந்து 152 ஆண்டுகளாக குப்பைகளை சேகரிக்கும் இடமாக உள்ள அரியமங்கலம் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகள் ஓராண்டுக்குள் முழுமையாக அகற்றி 47 ஏக்கா் நிலத்தை மீட்கவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார்.
கோடை காலத்தில் இதில் தீப்பிடித்து புகை மண்டலம் உருவாகி, சுவாசக் கோளாறால் பலா் பாதிக்கப்பட்டதாகவும், சிலா் இறக்க நேரிட்டதாகவும் இந்தப் பகுதி மக்கள் கூறினா். 2021 தோ்தல் பிரசாரத்துக்கு வந்தபோதே இந்த குப்பைக் கிடங்கு பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
.இங்குள்ள குப்பைகளை தரம் பிரித்து அகற்றும் பணி 2019 முதல் நடைபெறுகிறது.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையா் சிவசுப்பிரமணியன், மாநகராட்சி முதன்மைப் பொறியாளா் அமுதவல்லி, முன்னாள் எம்எல்ஏ கே.என். சேகரன், மாநகராட்சிப் பொறியாளா்கள் உடனிருந்தனா்.