திருச்சியில் முதல்வர், கொரோனா நடவடிக்கை ஆய்வு ; ஜூன் மாதம் 2000 !

திருச்சியில் நேற்று முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருச்சி அரசு பொது மருத்துவமனையில் உள்ள வசதிகளை நேரில் பார்வையிட்டார்.
தற்போது உள்ள 914 படுக்கைகளுடன் மேலும் 250 படுக்கை வசதிகளை திறந்து வைத்தார். திருச்சி அரசு மருத்துவமனை 1164 பேர் சிகிச்சை அளிப்பதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மல்டி ஸ்பெஷாலிட்டி சிறப்பு வார்டில் 6 மாடிகளிலும் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள், ஐசியு வார்டுகள் மற்றும் ஆக்ஸிஜன் இல்லாத படுக்கைகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து முதல்வர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். அங்கு 50 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன, மேலும் கூடுதலாக 42 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி முகாமை முதல்வர் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய மு க ஸ்டாலின் தமிழக அரசால் எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். அப்போது கலைஞர் பிறந்த நாள் ஜூன் இரண்டாம் தேதி அன்று முதல் பாக்கி நிவாரணத்தொகை 2000 ரூபாய் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.

உடன் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், திருச்சி சிவா, திருச்சி கலெக்டர் சிவராசு, டீன் வனிதா உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.
