துபையிலிருந்து கடத்தி வரப்பட்ட 200 கிராம் தங்கம் பறிமுதல்
21ம் தேதி மதியம் துபையிலிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் சிவகங்கையைச் சோ்ந்த பயணி ஒருவரின் உடைமைகளில் சுத்தியலும் இருந்தது. சந்தேகம் அடைந்தசுங்கத் துறையினர் சோதனை செய்ததில், அதில் 200 கிராம் தங்கம் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்மதிப்பு ரூ. 9.80 லட்சமாகும்.