திருச்சியில் பேரிகார்டால் சாலைகள் அடைப்பு, வாகனங்கள் பறிமுதல் ; தேவையற்ற நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை முயற்சி !

0

கொரோனா பரவல் இரண்டாவது அலை காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் மக்கள் பெருமளவில் ஊரடங்கு விதியை மீறி தேவையற்ற வீதிகளில் உலா வருகின்றனர்.

பலர் மீது அபராதம் விதிக்கப்பட்டும், வழக்குப்பதிவு செய்யப்பட்டும் நடமாட்டம் திருச்சியில் குறைந்ததாக தெரியவில்லை. மேலும் திருச்சியின் அனைத்துப் பகுதிகளிலும் வாகனங்களில் தேவையற்று சுற்றித் வருப்பவரின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது.
இதன் காரணமாக திருச்சியில் கொரோனா பரவலும் பெருமளவில் அதிகரித்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக மருத்துவமனைகளின் படுக்கைகள் நிறைந்து காணப்படும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.

சந்தா 2

இந்த நிலையில் தேவையற்று வீதிகளில் சுற்றித் திரியும் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த திருச்சி மாநகர காவல்துறை பல்வேறு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து இருக்கிறது. சாலைகளை முழுமையாக பேரிகார்டுகளால் அடைத்து வரும் வாகனங்களுக்கு காவலர்கள் அறிவுரை கூறி அனுப்புகின்றனர்.

‌சந்தா 1
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கேகே நகர் ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டது

மேலும் தேவையற்று சுற்றித்திரிந்த 400 வாகனங்கள் கடந்த நான்கு நாட்களில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.