திருச்சியில் இரவில் சூறைக்காற்றுடன் பலத்த மழை , வாழை மரங்கள் சேதம், விவசாயிகள் வேதனை !

0
1

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஓரிரு நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று திருச்சி புறநகர் பகுதியான உப்பிலியபுரம், பச்சபெருமாள்பட்டி, எரகாடு, ரெட்டியாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இதில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சாய்ந்தன. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கில் இலப்பு ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக அரசு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் திருச்சி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

3

Leave A Reply

Your email address will not be published.