கொரோனா பணிகள் எம்எல்ஏக்கள் மருத்துவமனையில் ஆய்வு !

0

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் லால்குடி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் கொரோனா படுக்கைகள், ஆக்சிஜன் வசதி, தடுப்பூசி மையம், பரிசோதனை மையம் உள்ளிட்டவற்றை எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் ஆய்வு செய்தார். ‌‌

மற்றும் குமுளூர் வேளாண் கல்லூரியில் மாணவர் தங்கும் விடுதியை கொரோனா வார்டாக மாற்ற ஏற்பாடு செய்யவும் கேட்டுக்கொண்டார்.

மற்றும் மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு தேவையான கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். மேலும் அவசர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, ஆக்சிஜன் தேவை, மருத்துவமனை பராமரிப்பு குறித்து பணியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது மணப்பாறை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

Leave A Reply

Your email address will not be published.