தமிழக முதல்வர் திருச்சி வருகை
திருச்சிக்கு கரோனா தடுப்பு பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து ஆய்வு செய்ய, மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக திருச்சிக்கு இன்று வருகை புரிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருநாவுக்கரசு எம்.பி. மற்றும் காங்கிரஸ், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாலையில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.