மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளி!

0

திருச்சி மண்ணச்சநல்லூர் கடைவீதியில் மனநலம் பாதிக்கப்பட்ட சுந்தர் சுற்றித்திரிந்து வந்துள்ளார். இதையடுத்து அவர் பெற்றோர் அவரை காப்பகத்தில் சேர்க்க காவல் துறையினரிடம் உதவி கேட்டுள்ளனர். இதை அதை அடுத்து மண்ணச்சநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்து அரசு காப்பகத்திற்கு தகவல் கொடுத்தார்.

சந்தா 2

இந்த நிலையில் காப்பக ஊழியர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட சுந்தரி பரிசோதித்ததில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளது தெரியவந்தது. இதனால் காப்பக ஊழியர்கள் சுந்தரை மருத்துவமனையில் சேர்க்க கூறிவிட்டு சென்றுவிட்டனர்.

இதையடுத்து சுந்தர் கடைவீதியில் சுற்றித் திரிவது நோய் பரவ வழிவகுக்கும் என்பதால் காவல்துறையினர், மண்ணச்சநல்லூர் வட்டார அரசு மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தனர். பிறகு மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் சுந்தருக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். மேலும் சுந்தர் அவளது வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளார்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.